மனமே கணமும் மறவாதே
ஜகதீசன் மலர் பதமே
.
மோகம் மூழ்கி பாழாகாதே
மாயா வாழ்வு சதமா
.
நாளை என்பார் யார் அதை கண்டார்
ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே
.
நடையும் தளர தேகம் ஒடுங்க
நாவது குழர கண்கள் மங்க
என்ன செய்வார் துணை யார் வருவார்
ஈசன் மலர் பதமே
*****************************
பல்லவி
பால்வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவச மிக வாகுதே (கண்ணா)
அனுபல்லவி
நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு
அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும்
சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்)
சரணம்
வான முகட்டில் சட்று
மனம் வந்து நோக்கினும்
(உன்) மோன முகம் வந்து தோனுதே
தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
(உன்) சிரித்த முகம் வந்து காணுதே
கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் (அங்கு)
உன் கான குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறுத்த மயிலிற-
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்
குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு
நளினமான சலனத்திலே
காளிங்கன் சிரத்திலே
கதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும்
கனிந்துருக வரம் தருக பரம் கருணை (பால்வடியும்)
****
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
சரணம் 1
வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
சரணம் 3
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 4
கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
சரணம் – 5
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…..
********
பல்லவி
நேற்றந்தி நேரத்திலே நீராடும் கரை தனிலே
நெருங்கி உம்மை ஜாடை காட்டி
அழைத்தவள் யாரய்யா (நேற்றந்தி)
அனுபல்லவி
நேர்த்தி மாமயிலேறும் கந்தா
நீரவளும் எதிர்முழியாய் நிற்க மையலிலே
சொக்கையிலே பக்கந்தனில் இருந்தேன் ஸ்வாமி (நேற்றந்தி)
சரணம் 1
முன்னாளில் என்னிடத்தில் சொந்தம்
போல கிட்ட வந்து முத்து முத்தாய் சரசமாடி
மோஹமதைத் தந்த மன்னவா உன் நினைவு கொண்டு,
அன்னம் கண்டொரு மாதமுண்டு
வாருமய்யா என் துரையே, தீருமய்யா என் கவலை (நேற்றந்தி)
சரணம் 2
பிள்ளை மதி உடைய பெண்கள்; பேதமையைக் கண்டு
பேருலகில் சூட்கொள்ளுவர்; புருஷர் இதுவுண்டு
தெள்ளூ தமிழ் சுப்பராமன்; செய்பதத்துக்கு சுருளும்
திருவிடையோ இனி சஹியேன்;
சேவலங்கொடியுடையோய் (நேற்றந்தி)
************
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புனிதமான பல கோடிபிறவி தந்தாலும்
பிருந்தாவனம் அதில் ஒரு
(புல்லாய்)
புல்லாகிலும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே - கண்ணா
கமலமலர் இணைகள் அணைய எனதுஉள்ளம்
புளகிதம் உற்றிடும் பவம அற்றிடுமே
(புல்லாய்)
(புளகிதம்=இன்பம்; பவம்=பிறவி)
ஒருகணம் உன்பதம் படும் என்மேலே
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே
திருமேனி என்மேலே
அமர்ந்திடும் ஒருகாலே
திருமகள் எனமலர் பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே
திசைதிசை எங்கணும் பரவிடும் குழலிசை
மயங்கி வரும் பல கோபியருடனே
சிறந்த ரசமிகு நடம் நீயாடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே
தவமிகு சுரரொடு முனிவரும் விய நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும் இறைவனே
யமுனைத் துறைவனே
Comments
Post a Comment