வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம்.
வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன். விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம். வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம்.
வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம். எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம்.
அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும்,
உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரும், முடிவே அற்ற புருஷோத்தமனை, ஆயிரம் நாமங்களாலே தொடர்ந்து துதித்தும்,
அர்சித்தும், புகழ்ந்தும் வழிபடுபவனும், ஆதியும் அந்தமும் அற்றவனும், சகல உலக தலைவர்களுக்கும் தலைவனையே, எக்காலமும் புகழ்ந்து, வணங்குபவனே. சகல துயரங்களையும், கடந்தவன் ஆவானே
வேதத்திலும், தவத்திலும், உறவு உடையவனும், பிரபஞ்சங்களின், பெருமையை வளர்ப்பவனையே, புகழ்ந்து வணங்குபவனே, சகல துன்பங்களையும், கடந்தவன் ஆவானே. புண்டரீகாட்சனான பகவானை, துதிகளால் அர்சித்து வழிபடுவனே உயர்ந்த தர்மமாகுமே.
எது மேன்மையானதும், தவமே உருவானதோ, முழுமுதற் பொருளோ, அதுவே ஒன்றாகிய தஞ்சமாகுமே. தூய்மையில் எவன் தூய்மையோ, மங்களத்தில் மங்களமோ, தேவதைகளுக்குள் தேவதையோ,
உயர்களுக்கே உயிரினை அளித்திடும், அழிவேயில்லாத தந்தை எவனோ, அவனே அகிலத்தின், ஒன்றான தெய்வாகுமே. எவனிடமிருந்து, ஆதியுகத்தில் உயிர்கள் தோன்றினாவோ, யுகம் முடிவில் மறைகின்றனவோ எவன் பூமியை சுமந்து,
எங்குமே பிரகாசிக்கும் ஜகன்நாதனோ, அந்த விஷ்வின், ஆயிரம் நாமங்களுமே, பாவத்தை நீக்கிடும் என்பதை என்னிடம் நீயே, கேட்டிடுவாய். பகவானுக்கு எந்தெந்த திருநாமங்கள், குணங்களை பற்றிய புகழ் கொண்டனவோ, முனிவர்களால் அசையானதோ,
அந்த நான்கு வகை பேருகளை அடைந்து, உயர்வு காணவே, உனக்கு கூறுவேன்யாம். எங்குமே இருப்பவனாகி, யாவற்றிலும் நிலைத்தவனாகி, மஹேஸ்வரனாகி, பல உருவம் கொண்டுமே, அசுரர்களை அழித்த, புருஷோத்தமனான, ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்
ஸ்ரீவிஷ்ணுவின் சகஸ்ரநாம மொழியான, இந்த மகா மந்திரத்திற்கு வேத வியாசரே ரிஷி, அநுஷ்டுச்சந்தம். ஸ்ரீமகாவிஷ்ணுவும், பரமாத்மாவுமான ஸ்ரீமன் நாராயணணே தெய்வம். "அம்ருதாம் ஸ’த்பவோ பாநுவு" என்பது பீஜம். தேவகீ நந்தத. ஸ்ரேஷ்டாக. என்பது சக்தி.
உத்வப் சோபனு தேவக என்பது மேலான மந்திரம்
சங்கப்ருந் நந்த்கீ சக்ரீ என்பது கீலகம்
சார்ந்கதந்வா கதாதர என்பது அஸ்திரம்
ரதாங்க பாணி ரப்யோப்யக என்பது நோத்திரம்
த்ரிஸாமா பரபிரம்மம் என்பது யோனி
ருது சுதர்ஸந காலக என்பது ரிப்பந்தம்
ஸ்ரீ விஷ்வ ரூபக என்று, இடையறாக நினைந்து, புனித ரத்தினங்களை கொண்ட பாற்கடலே, முத்து மாலைகளுடன் கூடிய, ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், வெண்மையான மேகங்களால் துளிர்ந்திடும், அமுத திவலைகளால் மகிழ்வானவரும், சக்ரம், பத்மம், கதை, சங்கம் தனை கைகொண்ட, முகுந்தன் நம்மை தூய்மை ஆக்கட்டும்.
எவருக்கு புவனம் காய்களாகவும், வானமே நாபியாகவும், வாயுவே உயிராகவும், திங்களும் கதிரவனும் நயனங்களாகவும், விசைகள் செவிகளாகவும், வானுலகம் சிரசாகவும், அக்னியே வாயாகவும், கடல் அடி வயிறாகவும் உள்ளனவோ,
எவருடைய வயிற்றில், வானவர், மாந்தர், பறவைகள், மிருகங்களுடன், நாகர், கந்தவர், அசூரர் என பரந்த அகிலம் ஆடிக்களிக்கின்றதோ அந்த மூவுலக உருவானவரான விஷ்ணுவை வணங்குகின்றேன்.
ஷேச சயனராகி, நாபியில் தாமரை மலர்ந்திடவும் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகியும், வானுக்கே ஈடானவராகி, மேக வண்ணனாகி பிறவிப் பிணிதனை நீக்கியுமே சகல பூமிக்கும் தலைவரேயான ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்.
கருமுகிலெனவும், மஞ்சள் பட்டாடை அணிந்து ஸ்ரீவத்சம் எனும் மருவை கொண்டவரும், கௌஸ்துப மணியால், ஒளியான அங்கங்களுடனே, சகல உலகங்களின் தலைவரான, ஸ்ரீவிஷ்வை வணங்குகின்றேன்.
சங்கு, சக்ரம், கீரடம், குண்டலமுடன் பொன்னாடை தரித்துமே, திருமார்பினில் கௌஸ்துபம் ஒளி வீசிடும் ஸ்ரீவிஷ்ணுவை சிரசால் வணங்குகின்றேன். பாரிஜாத மரநிழலில், நிலவு போன்ற திருமுகத்துடனும், நான்கு புயங்களுடன் ஸ்ரீவத்சம் ஒளிரும் மார்புடன், ருக்மிணி சத்யபாமையுடன் இணைந்து பிரகாசிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை சரணாகதியடைகின்றேன்.
அகிலம் யாவுமே, தானாக உள்ளவருக்கு வணக்கம். எங்கும் நிறைந்தவரே, யாக வடிவானவரே, மூன்று காலங்களுக்கும் தலைவரே. இருப்பது யாவையும் சிருஷ்டித்து, அதனையும் தாங்குபவரே. உயிர்களுக்கே உயிரேயாகி, படைப்பது யாவையும் காப்பவரே,
யாவற்றக்கம் உள்ளிருந்து, யாவையும் கடந்து, தொலைவில் இருப்பவரே. முக்தர்களுக்கு நிகரில்லா, புகலிடமானவரே, மாறுபாடுயில்லாதவராகி, உறவென்ற உடலில் உள்ளவரே யாவையும் நேரில் காண்பவரே, ஷேத்ரம் என்ற உடலை உணர்ந்தவரே. அழிவே இல்லாதவரே.
யோகத்தால் பெறக்கூடியவரே, யோகத்தை உணர்ந்தோரின் முதன்மையானவரே, நரஷிம்ம வடிவானவரே. திருமார்பினில் லட்சுமி பிரியாதிருப்பதால் உள்ளத்தை யாதர்ஷிப்பவரே. வனப்புமிக்க கூந்தலை உடையரே, ஜீவான்மாவில் மேலானவரே.
எல்லாமாகவே இருந்துமே, தூய்மையின் உருவானவரே நிலையானவரே, தோன்றியது அனைத்திற்கும் மூலமானவரே அரவோரை காத்து, தீயோரை அழித்திட, அவதாரம் புரிபவரே, அதீதமான திறமையுடையவரே யாவையும் அடக்கி ஆள்பவரே
சூரிய மண்டலத்தில் இருந்திடும், பரம புருஷரே தாமரைக்கொப்பான நயனங்களை உடையவரே. வீருகொண்ட நாதத்தை கொண்டவரே, முதலும் முடிவுமே இல்லாதவரே, சகல தொழில்களையும், நன்மைகளையும், வளர்ப்பவரே, நான்முகனினும் மேலானவரே,
ஆதாரங்களுக்க எட்டாதவரே, இந்திரியங்களை அடக்கி ஆள்பவரே, பூமிக்கே காரணமான தாமரையை நாபியில் உடையவரே, வானவரின் தலைவரே, தொன்மை ஆனவரே, கருமை நிறமுடன், சிவந்த கண்களுடன் இருப்பவரே. பிரளய சமயம், யாவையும் அழிப்பவரே,
ஞானம், செல்வமென்ற குணங்களுடன், மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவே, புனிதமாக்கும் முனிவராகவும், மந்திரமாகவும் தெய்வமாகவும் இருப்பவரே. யாவையும் அடங்கச் செய்து அரசு புரிபவரே, எல்லாவற்றுக்கும் முதன்மை ஆனவரே, அனைத்தையும் கடந்து, உயர்வு கொண்டவரே,
பொன்மயமான பிரம்மமாண்டத்தில் உள்ள பிரம்ம வடிவமாக இருப்பவரே, பூமியை வயிற்றினுள் வைத்து காப்பவரே. திருமகள் துணைவரே, மது என்ற அரக்கனை அழித்தவரே, சகல வலிமை உடையவரே, சத்ருக்களை அழித்திடும் துணிவு கொண்டவரே,
சிறந்த வில்லாளியே, யாவையும் அறிந்திடும் நுண்ணறிவு உடையவரே, உலகினை அளந்தவரே, தனக்கு நிகரில்லாதவரே, ஊக்கமே ஒன்றானவரே, தனது பெருமைதனையே தனக்கு ப்ரமானமாகக் கொண்டவரே
துன்பம் கொண்டவர் துயரினை துடைப்பவரே, பகல் போன்ற ஒளியானவரே, வருடமாகிய கால வடிவமே, மகா சர்பம் போன்று, எவராலும் பிடிக்க முடியாதவரே, ஞான உருவமாகி, எல்லாமே கண்களாகக் கொண்டவரே. பிறப்பற்றவரே யாவருக்கும் ஈஸ்வரரே எந்நாளும் எங்குமே நிறைந்திருப்பவரே
எல்லாவற்றிற்குமே, அடிப்படையானவரே, தர்மரூபியாகவும் வராக வடிவமாகவும் உள்ளவரே. எல்லையை காணமுடியாதவரே. அனைத்தையும் இணைப்பும், நீங்கியவரே உயர்வு உள்ளம் படைத்தவராகி, உண்மையை வடிவானவரே, அளவே கூறமுடியாதவரே, துதிப்பவர்க்கும், பூழை செய்பவருக்கும் தானம் புரிபவருக்கும் பலன்களை வாரி வழங்குபவரே.
புண்டரீகமென்ற பரமபதம்தனில் நிரந்தரமாய் உள்ளவர்க்கு கண்ணானவரே. பலசிரசுகளை கொண்ட வீராட புருஷரே யாவற்றுக்குமே பிறப்பிடமே. பாவங்களை நீக்கிடும் புனித நாமங்களை கொண்டவரே அடியாரிடம் நிலையாய் இருப்பவரே
அசுர சைஷங்கங்களை பல திக்குகளிலும் சிதற அடிப்பவரே. ஜனார்த்தனனே வேதமே ஆகியும், வேத உட்பொருளை உணர்பவரே, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவரே. வேதங்களை அங்கங்களாக கொண்டுமே, வேதங்களை ஊடுருவிப் பார்ப்பவரே
அகிலங்களையும், தேவர்களின் செய்கைகளையும் மேற்பார்வை செய்பவரே தர்மதர்மங்களை தானே பார்ப்பவரே, நான்கு மூர்த்திகள், நான்கு வியூகங்கள், நான்கு நெற்றிப் பற்களுடனே, நான்கு தோள்களையும் உடையவரே, ஒளி உருவானவரே.
தன்னிடமும் தனது அடியார்களிடமும் செய்திடும் குற்றங்களை பொறுத்தருளுபவரே, வையகம் தோன்றம் முன்பே ஜனித்தவரே பாவம் சிறிதுமே இல்லாதவரே, உலகம் யாவையும் தோன்றும் இடமாய் உடையவரே சரீரம் முழுவதும் ஷேத்ரட்ஞராகி இருகியுள்ளவரே
இந்திரனுக்கும், உயர்வான தேவர் கோன் ஆனவரே, வாமனராய் வந்தவரே, மூவுலகையும் அளந்த சமயம் உயர்ந்தவரே. அண்டியவரை வீணாகாமல் செய்பவரே, சிருஷ்டி கர்த்ததாவே, தன்னையே ஈந்து ஆன்மாக்களை உய்விப்பவரே, விரமன் கோன்றவரை, அவர்தம் பதவிகளில் நியமனம் செய்பவரே
முக்தியை விரும்புவோரரால் உணரத்தக்கவரே, சகல வித்தைகளையும் தெரிந்தவரே, மாதவரே, தேனானவரே மாயை வழி வந்ததவரே, கடமையின் திருவடிவானவரே, வராகமாய் வந்து, புவனமதை தூக்கியவரே சாத்வீக குணமுள்ளவருக்கு புகழிடமானவரே.
எவராலும் தடுக்திட இயலாதவரே, தேவர்களுக்கு ஆனந்தம் தருபவரே ஓம் என்ற சொல் தன்னையே சேரும்படி இயற்றுபவரே. அகம் சக: என தன்மையை தன் வயமாக எண்ணுவோரின் சம்சார பீதியை அகற்றுபவரே
பேரறிவு, மோட்ச இன்பமென்ற பொலிவான சிறகுகளை உடையவரே, நரநாராயணனாகி, உயர்வான தவம் புரிந்தவரே, தங்கம் போன்ற அழகான நாபியை உடையவரே, நாபித் தாமரையில் தோன்றிய பிரம்மா போன்றோருக்கு தலைவரே
மரணம் அற்றவரே, தீவிணையாளர்களை வதைப்பவரே, பாவபுண்ணியங்களை அனுபவிப்பவரும், தானாகவே ஆனவரே, எரிரிகளால் அடக்கிடவும், தாக்கிடவும் முடியாதவரே. வாய்மை, அறிவு என்ற குணங்களால் வேதத்தில் விகுதியாக சொல்லப்பட்டவரே
சகல வித்தைகளையும் உபதேஷம் செய்பவரே, முக்திநிறை உபதேசிக்கும் குருவே, யோக நித்திரையால், கண்களை மூடியுள்ளவரே, எக்காலமும் விழிப்புடன் இருப்பவரே, பஞ்சகண் மாத்திரையான வைஜெயந்தி அணிந்தவரே கல்விக்கே அரசனான சர்பஞ்ரே
வாழ்கை சக்கரத்தை சுழல செய்பவரே, குடும்பற்றில்லாத குணவானே, தம்மையே துதிப்பவரின் மன இருளை அகற்றுபவரே. பகலை தோற்றுவிக்கும், கதிரவன் வடிவினரே. அக்னியாகவும், காற்றாகவும் ஆனவரே
அருள் நிரம்பியவரே, விருப்பு வெறுப்பில்லாத தெள்ளிய உள்ளம் உடையவரே, உலகினை முடிவு நேரமதில் உண்பவரே, நல்லவரை போற்றித் துதித்துமே நல்லோரால் பூஜை செய்யப்படுபவரே
நியாயமான வழியில் நடப்பவரே, நாராயணனே கண்க்குக்கு கட்டுப்படாதவரே, ஞானத்திற்குமே எட்டாதவரே நல்லோரை காத்திடும் களங்கமற்றவரே, காரிய சித்தியை அளித்துமே சித்திக்கே ஆதாரமானவரே
பகல் போன்ற ஒளி தரும் கொடை வடிவானவரே, அடியவர் விரும்புவதை வர்ஷிப்பவரே, தர்ம வடிவமான படிகளால், சேர்ந்திடக் கூடியவரே, சுருதிகளா இரநதிகள், நாடிச் சேர்ந்திடும் கடல் போன்றவரே
உஷ்ணம் தருபவரே, உதாதஸ் வரமுள்ள ஓம் என்ற எழுத்தால் காட்டப்படுபவரே மந்திரங்களினால் உணரத்தக்கவரே. சந்திர கிரணம் போன்று ஆனந்தம் தருபவரே, சூரியனைப் போல பிரகாசமானவேர, முக்காலங்களுக்கும் இறைவன் ஆனவரே, காற்றாகி சுத்தமாக்கபவரே, காற்றினை வீசும்படி செய்பவரே,
காமன் எனப்படும் பிரத்யுனனை உண்டாக்கிய தந்தையானவரே, பொலிவுடன் கவர்ச்சி மிக்கவரே, யுகம் போன்ற கால மாறுபாடுகளை ஏற்படுத்தியவரே, யுகங்களை மறுபடி மறுபடி உண்டாக்கபவரே, பலவித பொய் தோற்றங்களை அணிபவரே, யோகிகளுக்குத் தோன்றபவரே
பதினான்கு உலகங்களான, பத்மத்தை நாபியை கொண்டவரே, இதயத் தாமரையால் துதிக்கப்படுபவரே, தனது மாயையால் பல சரீரங்களை எடுப்பவரே பெரும் செல்வமுடன் கூடியவராகி, உலக உருவமாக வளர்ச்சி அடைபவரே.
பெரிய கண்களுடன் கூடிய கருடக் கொடியின் நாயகரே, எல்லாரின் இதயங்களிலும் நிறைந்தவரே, எவரையும் தன்னிடம் பயந்து நடக்கும் படி செய்பவரே, சமயம் என்ற வழிபாட்டு நியதிகளை உணர்ந்து ஒப்புக்கொள்பவரே
யாகத்தில், அவிர்பாகங்களை பெறுபவரே, புரோஹிதமென்ற சிவப்பு மீனாகத் தோன்றியவரே, முக்தி நிலை அடைய விருப்பம் உள்ளவர்களால் தேடப்படுபவரே, தமோதரனே, யாவற்றையும் பொறுத்துக் கொள்பவரே
சுயேச்சை ஆனவரே, அதிசயமான புவனங்களை தோற்றுவித்தவரே, தனது சுயவடிவமும், சக்தியும், செயல்களும், உணரமுடியாமல் இருப்பவரே. ஞான வடிவமே எல்லா விளைவுகளுக்கும் அடிப்படையாக காணப்படுபவரே மோட்ச இன்பமாகியுமே எக்காலமும் முழுமையானவரே.
மங்களமான கடைக்கண் பார்வையுடையவரே, எல்லாருமே தன்னிடம், ஆனந்தமுடன் இருப்பவரே, மற்றவர்களுக்கு களங்கமில்லாத வழியை காட்டுபவரே, தத்துவ அறிவினால் உயிரினை பரமாத்மா வாகும்படி அழைத்துக் கொள்பவரே,
யாவற்றையும் நடத்தினாலும், தான் யாராலும் நடத்தப்படாதவரே வலிமைமிக்க பிரம்மன் போன்ற தேவர்களுக்கும், மிகவும் வலிமை படைத்தவரே, சிருஷ்டி சமயம் பஞ்சபூதங்களை ஒன்றாக்கி வைத்திருப்பவரே, பிராண வாயுவாகி, பிரபஞ்சத்தை இயக்க செய்பவரே,
ருது என்ற காலம் ஆனவரே, அடியவர்களால் எல்லா வழிகளிகளாலும் ஏற்கப்படுபவரே சகல செயல்களையும் சீக்கிறமே முடிப்பவரே, முக்தி நிலையென்ற இளைப்பாறுதலை தருபவதே, அனைத்து செயல்களிலும் சாமர்த்தியம் ஆனவரே தம்மிடம் உலகம் யாவுமே விஸ்தாரமாக உள்ளவரே.
தானே ஸ்திரமாகவும், புவனம் போன்றவை தன்னிடம் ஸ்திரமாகக் கொண்டுள்ளவரே, சுருத வடிவமே, யாவராலும் அன்பு கொள்ளப்படுபவரே, ஐந்து பெரிய பொக்கிஷ சாலைகளைக் கொண்டவரே, போக சாதனமாகிய பெரும் செல்வம் உடையவரே, நட்ஷத்திர மண்டலமாகிய சிம்சுமார, சக்கரத்தின் குடம் போன்றவரே,
யக்ஞ வடிவானவரே யுகஸ் தம்பம்நாட்டிச் செய்திடும், யாக உருவானவரே, நல்லவர்களை காப்பவரே, தானாகவே சகல வட்றுக்களையும் விட்ட ஆன்மா ஆனவரே, தானாகவேயாகுமே ஆகி, உயர்பவராகவும் உள்ளவரே,
நாடியவரைக் காத்திடும் சீரமான விரதம் பூண்டவரே, உரிவு திருமுகத்துடன் ஞானத்தில் மட்டுமே தோன்றிடும், நுண்ணிய வடிவமானவரே. வேதம் என்ற மங்கள கோசம் புரிந்தவரே, துறவிகளுக்கு இன்பம் ஆனவரே, பிரதிபலன் பாராது உதவி அளிப்பவரே உள்ளத்தை கொள்ளை கொள்பவரே,
பாவம் புரிபவரை, சின்னாபின்னம் ஆக்குபவரே, எவருக்குமே பயப்படாதவரே, வானம் போன்று, எங்குமே நிறைந்துள்ளவரே, திவ்ய திருமேனி, ஒன்று அல்லாதவரே, அடியவர்களிடம் கரை காணாத அன்பு கொண்டவரே, மாந்தர் யாவரையும் தமது குழந்தைகளாகக் கருதுபவரே, ரத்தினங்களை உள்ளே வைத்துக் கொண்டுள்ள கடலானவரே,
செல்வத்தின் தலைவரே, அறத்தை காப்பவரே, பரவிரம்மமான, பரம்பொருளே, அபரப் பிரம்மத்தில் மறைந்துள்ள பிரம்மமே, சரவடிவானவரே, அட்சர ரூபம் ஆனவரே, ஆயிரக்கணக்கான புதிர்களை கொண்டவரே, தனது ஆட்ம ஞானத்தால் யோகேஸ்வரன் என புகழப்படுவரே,
பூமி தேவியின் நாயகரே, வானரர்களுக்கு தலைவனான ஸ்ரீராமரே அமிர்தத்தை பானம் செய்பவரே. உமாதேவியுடன் கூடிய சிவனாகவும் உள்ளவரே, மாமுனிவராகிய, கபிலாசாரிய வடிவானவரே, பூமிக்கே தலைவன் ஆனவரே, ஜாக்ர சொப்னம், சுசுகீயென்ற மூன்று வினைகளுக்கும் மேல் நின்று கவனிப்பவரே,
மென்மையான கொம்பு உள்ளவரே, பெருமைமிகு சேனையை கொண்டவரே பொன்மயமான தோள் வளைகளைக் கண்டவரே மறை பொருளான வேதத்தின் ஞான காண்டத்தினால் மட்டும் உணரக் தகுந்தவரே வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவரே
எவராலும் வெற்றிகாண முடியாதவரே, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட வியாசரே, சாயரட்சயில் வருண திசையில் மறையும் சூரிய வடிவானவரே, வருண குமாரரான வசிஷ்டராக உள்ளவரே, மரம் போன்ற அசையாது இருப்பவரே,
தனம், கொடை, புகழ், பொருள், திடமானம், முக்திநிறை போன்றவைகளின் இருப்பிடமானவரே, ஆனந்தமயமானவரே, வைஜெயந்தி மாலையை தரித்துள்ளவரே. கலப்பை வடிவான ஆயுதம் ஏந்தியவரே அதீதி தேவியிடம் வாமனராக அவதாரம் செய்தவரே,
இந்திரீய வடிவான சாந்தமென்ற வில்லை உடையவரே, விரோதிகளை துண்டித்திடும், கோடரியை கொண்டவரே, நல்ல வழியை தடுப்பவர்க்கு கொடியோன் ஆனவரே, சகல ஞானங்களையும் போதித்த வியாசர் ஆனவரே
மூன்று சாமங்களாலும் துதிக்கப்படுபவரே, சாம கானம் புரிபவரே, சாம வேதம் ஆனவரே, பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தானவரே, முக்திநிலைதனை அடைந்திடவே துறவுகாசிரமம் தனை, ஏற்படுத்தித் தந்தவரே யுத்தத்தில் வெற்றியுடனே வருபவரே, தன்திருநாமம் எண்ணிய உடனேயே பாவங்களை நீக்குபவரே,
ஸ்ரீவத்சம் என்ற மருவை மார்பினில் கொண்டவரே, ஸ்ரீதேவிக்கு இருப்பிடமானவரே, ஸ்ரீநீ வாசனே, உம்மை எண்ணுவோர் துதிப்போர், பூஜிப்பவர்க்கு செல்வம் தருபவரே, மனதை கட்டுப்படுத்தியவரே, எவருக்குமே அடிபணியாதவரே, ஐயமே இல்லாதவரே,
தமக்கு மேம்பட்டு தலைவரே இல்லாதவரே, அச்சா விக்ரகங்களாகி, பூமியிலுள்ள ஆலயங்களில் நிறைவுடன் நிலைப்பவரே, எல்லா செல்வங்களுமே ஆனவரே சக்ரத்துக்குக் குடம், பற்றி கேடானது போனறு, யாவற்றுக்குமே ஆதாரமானவரே,
முக்குணங்களையும் கடந்து தூய்மை சுபாவம் பெற்றவரே, நாலு வியூகங்களில் நான்காவதான அனிருச்ரே, இரண்டாவதான பிரத்யும்னரே திருவிக்ரமா அவதாரத்தில், மூவுலகங்களிலும் திருவடி சுவடு அடங்காமல் இருந்தவரே,
பிரம்மா, விஷ்ணு, சிவசக்திகளுக்கு இருப்பிடமானவரே, கேசி என்ற அசுரனை கொன்றவரே, பச்சை வண்ணனே, இப்படித்தான் எனவும், ருசிப்பிக்க முடியாதவரே, ஸ்ரீவிஷ்ணுவே அர்ச்சுனனாக இருப்பவரே,
தவத்துக்கும், வேதத்துக்கும், செந்தன்மை உடையவர்க்கும், அறிவுக்கும், சாதகமானவரே, தவத்தினை உண்டாக்கியவரே, பிரம்மமான பரம்பொருளே தவத்தை கோசிப்பவரே அரவோர்க்கு பாசமானவரே,
துதியும் தாமேயாகி, துதிக்கும் செய்கையும் தாமாகி துதிப்பவரும் அவரே ஆனவரே. வையம் உயர பெரும் கல்வியைத் தந்து உபதேசிற்வரே, வசுதேவரின் பிள்ளையே, சத்தாகவும், சித்தாகவும், பேரொளியாய் திகழ்பவரே,
தந்துவம் புரிந்தோர் சேரும் இடமானவரே, வீரனான அனுமனை படையில் கொண்டவரே, யதுக்களின் தலைவரே அறிஞர்களின் இருப்பிடமே யமுனைவாசிகளால் சூழப்பட்டவரே
பலமுகங்கள் கொண்டும் ஒன்றேயனவரே, இன்பம் என்ற கருத்தான கா யென்ற சொல்லால், புகழப்படுபவரே, தானே புரியும் வழியான, பொருளை காட்டும், யத் என்ற சொல்லால் போற்றப்படுபவரே, தத் என்ற மொழியால் அடையாளம் காட்டப்படுபவரே,
பொன் போன்ற சரீரம் படைத்தவரே, காமக் குரோதங்களை அழிப்பவரே, தனது கல்யாண குணங்களால் பூமிக்கு சேமத்தை தருபவரே, அடியவருக்கு அருளிய சொல்லினை காத்திட தனது சபதத்தையும் விடுபவரே, நான்கு வடிவங்கள் பெற்றவரே,
நான்கு வருணாட்சிர தர்மங்களை, பின் தொடர்வோர் இருப்பிடமானவரே, நான்கு புருஷாதங்களுக்கு மூலம் ஆனவரே, நான்கு வேதங்களின் கருத்தினை அப்படியே உணர்பவரே, உலகம் யாவையும் தன் ஒரு பாதத்தில் அடக்கியவரே, கனிவானவரே பொலிவான நாசி உடையவரே,
மகிழ்வு வெள்ளம் நிரம்பிய பெரிய மடுவானவரே, படுகுழியான மாயைக்கு அரசரே குந்த மலர் போன்ற, நற்செயலின் நன்மைகளை தருபவரே, குந்த மலருக்கு நிகரான, அங்கங்கள் கொண்டவரே மேலான நோன்பு உள்ளவரே காரணமில்லாமல் தான் தானேயாகி என்றுமே இருப்பவரே,
கீழே உள்ள உலகுக்கெல்லாம் மேலாக இருப்பவரே சானுஉரன் என்ற அந்தர நாட்டு மன்னனை கொன்றவரே, ஏழு நாவுடைய அக்னி வடிவானவரே, ஏழு ஜ’வாலைகளை கொண்டவரே, ஏழு குதிரைகளுடன் கூடிய சூரியனாக உள்ளவரே, எண்ணிடவே முடியாதவரே, உருவமே இல்லாதவரே,
நுண்மையானவரே காற்று போன்ற மென்மையானவரே, எதனாலும் தாங்கப்படாமல் தன்னை தானே தாங்குபவரே, முதன்மையான குலு வழிவந்தவரே, பூபாரம் தாங்குபவரே, யோகத்தால் சேரப்படுபவரே, யோகிகளுக்கு உயர்ந்தவரே,
மறைகளியின்ற இலைகளுயுடன் கூடிய சம்சாரமென்ற மரவடிவானவரே, வில் வித்தை தெரிந்தவரே, தண்டிப்போரின் ஆயுதமாகவும், தண்டனையாகவும் ஆனவரே, எல்லா பகையையும் ஒடுக்குவரே, எம் பயமே இல்லாதவரே,
சர்ப்ப குணத்தை முதன்மையாக கொண்டவரே, நல்லவருக்கு நல்லவரே. வாய்மையையும் நற்செயலையும் பிரதானமாக எண்ணுபவரே, இஷ்டமான பொருட்களை சமர்பணம் செய்திட ஏற்றவரே, விஷ்ணு பதத்தில் வசிப்பவரே, தாகத்துடன் விருப்பம் கொண்டவரே,
ஆகுதியில் தரப்படுபவதை உண்பவரே, கதிரவனை கண்ணாகக் கொண்டவரே, கபில நிறமுள்ளவரே, மங்களத்தை புரிபவரே, மங்களமே தானே ஆனவரே, மங்களத்தை அனுபவிப்பவரே, மங்களத்தை சீக்கிரமே தருபவரே,
ஆசை, கோபம், கொடுஞ்செயல் விட்டவரே, சுதர்ஸன சக்கரம் தரிப்பவரே, நடையழகு மிக்கவரே, குளிர்ந்த திரியிடமானவரே, பிறருக்கு தம்மை சேரும் வரையிலுள்ள அளவற்ற பொருட்களை வைத்திருப்பவரே, அச்சத்தை அகற்றபவரே,
எல்லா செய்லகளுக்கும் பயனை கூறுபவரே, பஞ்சபூதங்களுக்கு ஆதாரமானவரே, பூ மலர்வது போன்று உலகமாகவே, சிருஷ்டி சயம் மலர்பவரே, நல்மார்கங்களை தானே கடைப்பிடிப்பவரே உயிரினைத் தருபவரே ஓங்காரப் பொருள் ஆனவரே
யாகங்களை நடத்துகிறவரே, யாகத்தை ஏற்றுக்கொள்பவரே, ஆகுதியில் யக்ஞத்தை உண்டாக்கியவரே, யாகங்களின் தலைவரே, ஊரணாகூதியால் யாகத்தை முடித்து வைப்பவரே, பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தை உடையவரே நத்தகமென்ற வாளை ஏந்தியவரே, சுதர்ஸன சக்ரம் கண்டவரே,
ஷாகமென்ற வில்லுடன் கூடியவரே, கௌமோதகி என்ற கதையை தாங்குபவரே, சக்கரத்தை கரத்தில் கொண்டவரே சரணடைந்தோர்க்கு அபயம் அளிப்பவரே எய்துவனயாயும் ஆயுதமாய் கொண்டவரே எய்துவனயாவும் ஆயுதமாய் கொண்டவரே ஓம் நமஹ
வனமாலையை அணிந்தவரும், கதை, ஷார்ங்கம், சங்கு, சக்ரம், வாளினை உடையவரும், விஷ்ணு எனவும் வாசுதேவன் என்ற திருநாமம் கொண்டவரும் மகாலட்சுமியுடன் இணைந்த ஸ்ரீமன் நாராயணன் அருள் புரிவாராக,
மேன்மையானவரும், புகழுக்கு உகந்தவரான கேசவனுடைய புனித நாமங்கள் ஆயிரமும் கூறப்பட்டனவே, இதனை தினந்தோரும் கேட்பவரும், பாராயணம் செய்பவரும் இம்மை மருமையிலும் எவ்வித துன்பமுமே அடையமாட்டார்.
அந்தணர் வேத அறிவு அடைவர், சத்தியர் வெற்றியை காண்பர், வைசியர் செல்வம் செழித்திடுவர், நான்காம் வருணத்தினர் சுகமே பெறுவர். தர்மத்தை வேண்டுவோர் தர்மமே டைவர். பொருளை வேண்டுவோர் பொருளை பெறுவர். போகங்களை நாடுவோர் போகங்களை காண்பர். சந்ததியை விரும்புவோர் சந்ததி நிரம்ப பெறுவரே.
எவன் தினமுமே துயில் எழுந்ததும் தூய்மை இறை மனமுடன் வாசுதேவரின் நாமங்களை கீர்த்தனம் செய்கின்றானோ பெரும் கீர்த்தி உயர்வான பதவி அளவற்ற செல்வம் மோட்சமதை பெறுவானே,
வாசுதேவரின் அடியவர்களுக்கு அச்சம் எந்நாளுமே இல்லை, இந்த துதிமொழியை பக்தியுடன் படிப்பவனும் ஆன்ம அமிர்தம் பொறுமை துணிவு ஞாபக சக்தியுடன் விளங்கிவானே, எவன் சகல சௌபாக்கியத்தையும் சுகம்யாவும் வேண்டுகின்றானோ, அவன்,
வியாசரால் கீர்த்தனம் செய்யப்பட்ட விஷ்ணுவின் இந்த துதிதனை பாராயணம் செய்ய வேண்டுமே, எல்லா உலகுக்கும் ஈசனும் பிறப்பே இல்லாதவனும் ஒளி பொருந்தியவனும் உலகின் தலைவனும்
சலனமற்ற தாமரைக் கண்ணனையே எவர்கள் வணங்குகின்றனரோ, அவர்களுக்கு தோல்வியே கிடையாது தோல்வியே கிடையாது, ஓம் நமஹ என சகல நன்மைகளும் ஏற்பட பரமன புருஷனை வணங்குகின்றேன்.
தாமரை இதழ் போன்ற நயனங்களை உடையவரே, நாபியில் தாமரை மலர்ந்தவரே, வானவரில் மேன்மையான ஜனார்த்தனா, அன்பு கொண்டவரிடம் அடைக்கலம் ஆவி என அர்ச்சுனன் கேட்டதுமே ஸ்ரீபகவான் கூறலானாரே
விஷ்ணுவின் சகஸ்ரநாமம் எக்காலமும் ஞாணிகளால் எப்படியாக எளிதில் பிரார்த்திக்கப்படுகின்றதோ அதனை கேட்க ஆவல் கொண்டுள்ளேன் எனவும் பார்வதிதேவி பரமேஸ்வரனிடம் வினவியதும் ஈசன் சொன்னாரே
ஸ்ரீராம ராம ராமயென உள்ளத்துக்கினிய ராமனிடம் ஈடுபடுகிறேன். அந்த ராம நாமமே சகஸ்ரநாமத்திற்கு ஒவ்வானது. ஸ்ரீராம நாமமே சகஸ்ரநாமத்திற்கு ஒப்பானது.
எந்த இத்தில் யோகத்தின் ஈஸ்வர் ஆன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கின்றாறோ, எங்கு வில்லேந்திய அர்ச்சுனன் உள்ளானோ, அங்கு சர்வ மங்களமும் ஜெயமும் பெருமையும் துணிவான நிதியும் தவழும் என்பதே என் கோட்பாடு என சஞ்சயர் சொன்னாரே,
ஸ்ரீபகவானின் அருட்குரல் ஒலித்ததுவே, என்னை விட எதிலிலுமே விப்பமின்றி, என்னையே எப்போதும் நினைத்துமே எந்த மக்கள் தூய்மையுடன் என்னை துதிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தகுதி படைத்தோரின் யோகச் ஷேமங்களை நான் தாங்கிக் கொள்கிறேன். சாதுக்களை காத்திடவும், துஷ்டர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதிபடுத்திடவும் யுகம் தோறும் தோன்றிடுவேன்.
துயரத்தால் ஏங்கி உள்ளம் உடைந்தோரும் பீதியடைந்தவர்களும் தீராத பிணியினால் பீடிக்கப்பட்டவர்களும், நாராயணா என்ற மொழியை கூறி சகல துக்கங்களிலிருந்து விடுபட்டு இன்பமுடன் வாழ்வாங்கு வாழ்ந்திடுக.
உடலாலோ, வாக்கினாலோ, நினைவாலோ, கரம் இந்திரியங்களாலோ, இயற்கையின் செயலாலோ எது எதனை நான் கூறுகின்றேனோ அவை அனைத்தையும் பரம புருஷனான ஸ்ரீமன் நாராயணனுக்கே காணிக்கை ஆக்குகின்றேன் ஓம் தத்ஸத்.
ஏராளமான அர்த்தப்பிழை சொற்பிழை கொண்டுள்ளது , தயைகூர்ந்து திருத்தவும்
ReplyDeleteசரி, நீங்கள் உதவ முடியுமா?
Deletevery Excellent devotional work. it is soul touching. good goahead. your attempt is much appreciated. Of course there are few spelling mistakes, but could understand the meaning when read along with listening the song. i love it.
ReplyDeleteCould you please provide me your email id
ReplyDeleteI SEND PDF FILE INTO YOUR MAIL, KINDLY REPLAY YOUR MAIL ID, stuinnovationspvtltd@gmail.com
ReplyDelete