Source https://ramanisblog.in/2014/04/11/நாராயண-ஸூக்தம்-பொருளுரை/ நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம், 4.10.13. 1. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | சகஸ்ர சீர்ஷம் - ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும், தேவம் - ஒளிமிகுந்த தலைவனும், விச்வாக்ஷம் - அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும், விஸ்வ சம்புவம் - அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும், மங்கலலத்தைச் செய்பவரும், விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும், அக்ஷரம் - அழிவற்றவரும், பரமம் பதம் - அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும், நாராயணம் தேவம் - நாராயணன் என்னும் தெய்வத்தை. எண்ணற்ற தலைகளை உடையவரும், ஒழி மிக்கவரும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும், உலகைத்தை விளைவித்து, மங்கலத்தைச் செய்பவரும், அணைத்து உலகிலும் நிறைந்து, விரிந்து பரந்தவரும், அழிவற்றவரும், மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன். 2. விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம்...
Om Namo Bhagavate Vāsudevāya