வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன். விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம். வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம். எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...
Comments
Post a Comment