Thursday, November 27, 2025

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள்

1​

அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும்

வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும்

​சுற்றிவர பொற்கதவும் ​ஸ்தூதிபியின் மேல் பொற்குடமும்

​இத்தலங்கள் காணப் ​பதினாயிரம் கண் வேண்டுமையா !


2

ஓம்கார பஞ்சணைமேல் உவந்து விளையாட வந்த

ஆங்காரப்பூரணியே ஆதரிக்கும் தென்குளத்தூர்

தேங்காய் கொடுத்தாலும் சிரட்டை கொடான் இண்டலையான்

பூங்காவிற்குள்ளிருக்கும் புண்ணியனைக் கொண்டாட


3

குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து

வளர்தொருவாய் பெற்றடுத்த மாதா அவளுக்கிணையாய்

குளத்தூரில் பதி நற்குலக் கன்னியர்கள் தந்த செல்வம்

குளத்தூரில் ஐயன் என்றால் குற்றம் ஒன்றும் வராதே !!


4

மாணிக்கமாலை மணி மாலை பூமாலை

காணிக்கை கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்

ஆணிப்பொன்மார்பன் அழகன் குளத்தூரானைப்

பேணித்தொழாய் நெஞ்சே !! பிழைகலொன்றும் ​ வராதே !!


5

கற்சரடு பொற்பதக்கம் கனகமுத்துச் சுவடிகளும்

மெய்யாய் சுமந்திருக்கும் வீரகா உன் திருமேனி

வட்டமிட்டு வரும் பேயைத் தடியெடுத்துதான் ​விரட்டும்

மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக்கல் ஆதிபனே !!!


6

பலமரங்கள் கிடுகிடுடென மலையருவி திடுதிடென

இரவுபகல் அறியாமல் பெருமாரி மொழிகாலம்

பாராய் பராபரனே !! பரதேசிக்காவலனே !!

வரங்கள் கொடுப்பவளே !!வாழ்க்குளத்தூராதிபனே !


​7

நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி

வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே

கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்

தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா


​8
​உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்

பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்

என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக

பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.


​9
சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க

இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி

வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச

காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே


​10
​கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி

இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்

வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்

கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே


​11
மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்

காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ

ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்

நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே


​12
எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்

பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்

அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்

பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே


​13
​நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று

பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்

பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்

விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே


​14
​உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று

நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்

ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்

சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே


​15
​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து

பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை

பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி

ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்.


​16
​பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர

கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட

மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட

ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே


1​7
​ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே

அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே

ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு

வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே


​1​8
​கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து

பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை

பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி​

ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்...


19
பிடித்தவடி கிடுகிடென பின்னுதவியில்லாமல்

நடுக்கடலில் குரங்கினம்போல் நான் தவிக்கும் அந்நேரம்

எடுத்த வில்லும் கருமையுமாய் அவர் பிறகே செருக்கனுமாய்

காத்தவனே !!! குளத்தூரா !!! சிவ காந்த மலைக்  காவலனே !!!


20
கல்லோ  இருப்போ கடும் வஜ்ரமோ சித்தமது

பொல்லாக் கொலைக்கோ குலதெய்வமென்று கையெடுத்தேன்

கல்லும் இரங்கும் கடும்  வஜ்ரமும்  தானிரங்கும்

புல்லும் இரங்கும் பேய் பிடாரியும் தான் இரங்கும் !!!!

ஸ்ரீ.குளத்தூர் பஞ்சகம்

1

எந்தனை இன்னம் தெரியவில்லையோ - கூடலூர் எங்கள்
பூர்வாசிரமத்தில் ஈற்றப் புலிசாய்க்கவென்று
ஏகும் வழியாய் வந்து ஏற்றவிலை சாஸனத்தில்
சொந்தடிமை என்று இலங்குவது அறிந்தும் நீர்
சோதனைகள் செய்வதாமோ - சொல் உறுதியாம்
எங்கள்குடி வாழவந்த பரஞ்சோதியே - பூபதியே |
உந்தனடியார்க்கு நீர் சந்ததி வரேந்திரன் என்று
ஒதுவதும் உண்மைதானோ - உபரிசந்தான வழி
உண்டென்று எனக்கு நீர் உத்தரவு தாருமையா.
சிந்தை ஆனந்த விழியாமிருதம் தெளிவாகி வந்து நானும்
உன் தரிசனம் செய்ய அருள்வீர் - திருமாலரன்பெற்ற
செல்வக் குமாரநிதி ஜெயவீர மணிகண்டனே ||

2

உற்றார் எனக்கு ஒருவரும் இல்லையே உனையன்றி
உர்வீதலத்தில் எங்கும் ஒன்றாக நின்று இலங்குகின்ற
உன் மஹிமயை என் நாவால் உரைக்கு எளிதோ ?
பக்தகோடியில் ஒருவன் எளிமையாய் இன்றிங்கு
பரிதவிக்கின்றதாமோ பரிவாக நீர் என் குடும்பாதி
குருவென்று உள்ளம் பாவித்திரங்கி., மேலும்
கொத்தடிமை யான்செய்த குற்றம் பொறுத்தென்னைக்
கார்த்தருள் செய்தும் - உந்தன் குவலயானந்த
விழியாமிருதம் தெளித்து - என் குடி வளர்த்தின் புறச் செய்வீர்
சிற்றம்பலத்தில் நின்று நிர்த்தம் விளைந்த என் குல தெய்வமே -
குளத்தூர் திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெய வீரமணிகண்டனே.

3


உம்மை ஸ்துதித்தவர்கள் உள்ளத்திலிருந்து நீர்
உயிராகி வாழ்வீர் என்றும் - உலகத்திலும் வேத
வழிமுற்றிலும் ஒதலுறுதிகை என்று போற்றும்
என்வம்சம் விலையென்று யானே பகர்ந்தமொழி இப்பொழுது
மித்யையாமோ - ஈற்றடைக்காமலுன் கருணாமிருதம் தேக்கி என்குடி வளர்த்து
மேலும் உன்சந்நதிப் பணிவிடைகள் என்னாளும் செய்யவே சந்ததிவரம் தருவீர்
தருணத்தில் ஓடைநீர் பெருக்கினாலல்லவோ யண்பயிர் தழைக்குமய்யா -
சின்னக்குழந்தையாய் தென்பாண்டியன் முன்பினில் நீர் சீராடி நின்ற தேவா -
திருமாலரன் பெற்ற செல்வக் குமாரநிதி ஜெயவீரமணிகண்டனே.

4


இனிமேலும் உம்மை ஸ்துதிப்பதல்லாது
வேறு இஷ்ட தெய்வங்களும் உண்டோ
எவ்வேளை உன் க்ருபை கிடைக்குமென்றே
காக்கும் என் ஹ்ருதய ஸதகத்தை தனது
குஞ்சென்பது தெரிந்தும் உன் கருணாம்ருதம்
தர தாமதித்தால் தமியேன் சகிக்க வசமாவேனோ
உன் செயலை யானும் அறியாததுண்டோ
மன வெறுப்போ இத்தென் மதுரையில்
அதிகாரியானதின் பெருமைதானோ
வம்ச வழியான குலதெய்வமென்ற
உனது சொல் மாற்றாமல் அருள் புரிவாய்
ஜன ஸமூகம் ஏத்திடும் தென்கரந்தாபுரியில்
சிந்தை பூரித்து வாழும் திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீரமணிகண்டனே
ஐந்துமலைக்கு அதிபனே சரணம் ஐயப்பா

5




பாசத்துடன் நெடும்பாறைத் தடத்து நீர்
பாரச்சுமடு எடுக்கவில்லையோ
பம்பா நதிக்கு பரி உன் பார வச்ஸ்யராம்
பக்தரை காக்கவில்லையோ
ஆசை அளவில்லாமே சைல வீதியில்
அந்தணர் அவலை வாங்கி ஆற்றைக் கடத்தி
சுமடேற்றும் ஜவந்தியூர் அத்தாழம் உண்டு
அனுதினமும் பூஜிப்பதும் மேலவாசல்
ப்ரதானி என் பரிபூரணானந்தனே என்
பண்பாடறிந்து என்னைக் கண் பார்த்து
இரங்குவாய் கவி பலது பாடினேன்
தேசம் புகழ்ந்த மணிதாஸ குல வரதனாம்
தேவனே ஸ்ரீ பூதநாதா திருமாலரன் பெற்ற
செல்வக்குமர நிதி ஜெய வீர மணிகண்டனே!!

ஸ்ரீ அச்சன்கோவில் பஞ்சகம்

1

கோடி ஸூர்யப்ரபா மண்டலம் போல்
ஒளி வீசி வருகின்றதைப் பார்
குவலயக் கண்ணன் த்ருபுவன வச்ஸ்யன்
நீல கோமளாங்க ப்ரகாசன்
தேடும் நவரத்ன கிரீட திவ்ய கேயூர ஹாரன்
செங்கையில் மாணிக்க பாத்ரம் கரும்பு வில்
அபயம் சேர்ந்திலங்கும் புஷ்ப பாணன்
நாடி நமதருகில் அவர் ஓடி விளையாடியே
நமதபீஷ்டங்கள் நாடு பதினேழறையில் தருவார்
நம்புவோர்க்கு உபகாரி என்பதில்
இவரன்றி நாட்டில் ஓர் தெய்வம் யார் காண்
ஆடலம்பரி ஏறி கூடலம்பதி சென்று
அடிமை கொண்டு அருளை நல்கும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்சோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே

2

மண்டலம் புகழ் வேதியர்கள் தொழும்
வீரமணிகண்டர்
இவர் பவனி பாரீர் வாசல் ப்ரதானியாய்
ஆவேசரங்கம் செய்து வருகின்றவன் கருப்பன்
தண்டலதிபன் தலைவன்
இண்டலையன் அண்டையில்
சட்டமிடு திட்டமுடையோன்
சாடி வரும் காற்றாடி
ஆடுறிஞ்சி முத்தன்
காடு வெட்டிகளும் கூட
துண்டரீக தலைவரென்ற செல்ல பிள்ளை
சுமதி முன்னோடி வருவார்
தோரணம் கட்டி
சமூஹகாரர்கள் தொழுதேற்ற தொண்டரிஷ்டங்கள் தருவார்
அண்டர் முனி தெண்டனிடுகின்ற
மணிகண்டர்
ஆராதனம் செய்யுமென்று
ஆதி சதுர் வேதங்கள்
ஒதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.

3

சிந்தையானந்தமுறவே ஒளி விளங்கும்
குல தெய்வம் வரும் கோஷமிது காண்
சீரணி வெறிக்கலியின் விலங்கொலி,
கலீர் கலீர் என சிறந்தழகு பூண்டு
அருகினில் வந்தவர்கள் வழி
பார்த்து இரங்கி வசமாகுவாள்
மாளிகையில் மேல் இசக்கி வடிவழகி
காடிக்கல் யக்ஷியுடன் வாது கொள் இசக்கி கூட
சொந்தமாம் பத்ரகாளியின் தனி
முழக்கொலி சேர் காளி வரதாளியும்
சொல் பெரிய பேச்சி வடிவில்
பிரம்மராக்ஷஸியும் சூழ்ந்து கொண்டாடி நடக்க
அந்தணர்கள் சிந்தையில் நினைத்த வரம்
அருளும் ஆவேச தேவனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.

4

விதி மனம் கொண்டு பாரதி முலைப்பால்
உண்ட வீரன் சவாரி பாரீர்
வில் அம்பு கத்தி கட்டாரியும் வல்லயம்
ஈட்டி வேல் பரசு வாள் சுரிகையும்
குதி கொண்டு பூதங்கள் எதிர்
கொண்டு அடுத்து வர
கூடலங்காடு சென்று
குட்டித் தாய்ப்புலி வட்டமிட்டு
அனந்த கோடி கூட்டி நகரோடு வந்து
மதுராபுரிக்கு அரசன் எதிராய் அழைத்து
தேவி தலைவலி மாற்றி நின்றஅரசே
வந்து என் துயராற்றி மைந்தர் வரமும் தந்து
என் வம்ச வழி காத்தருள்வாய்
அதி ரூப லாவண்யன்
மதி பூர்ண வல்லபன்
ஹரிஹர குமாரனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே

5

பணிகின்றவர்க்கு உயிர்த் துணை
என்ற விருதுடன் பாலிக்கும் ஸுகுண சீலன் பக்த பரிபாலனென்று எத்திசையும்
புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான மாணிக்க மார்பனாம் எனது
இஷ்டகுல தெய்வமாகி வந்த இவர் இருக்கும் போது கவலை ஏனோ மனமிரங்கி எமக்கின்று கண்காட்சி தருவாய்
கனி கண்டு கொண்டு கண்மனி
என்றிவர் பாத கமலத்தை இடைவிடாமல் காத்திருந்தால்
நமக்கு ஏற்ற வரமும் தருவார் கைவல்ய மூர்த்தி என்ற
அணிவேலவர்க்கு இளைய மணிதாஸர் ஹ்ருதயத்தில்
அருள் தத்வ போதனென்று
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.
எமையாளும் குலதெய்வமே சரணம் ஐயப்பா

ஸ்ரீ ஆரியங்காவு பஞ்சகம்

1

கருணாம்புதே உமது கமல பொற்பாதமே
கதியென்று காத்திருக்கும்
கம்பங்குடிக்கு உடமை உன்
பொன்னடிக்கு அடிமை கண்ட
விகிதப்படிக்கு உன் சரணார விந்தமே
ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய் நடந்தும் சற்றாகிலும் மனமிரங்காதது
ஏனென்று சாற்றி எம்மை ஆட்கொள்வீர் ஐயா
ஒரு நாளும் எளியனை கை விடேன் என்ற
உமது உறுதியை மறக்கலாமோ
ஓங்காரமான பொருளாகும் என் ஐயனே ஸ்ரீம்கார தீப ஒளியே திருமாரன் பெற்ற பெருமானே
எனக்குற்ற தீவினைகள் போக்கியருள்வாய்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும்
திருவாரியக் கடவுளே

2

அனவரதமும் அம்புவிக்கு
ஆதாரமான உமது அரவிந்த பாத தூளிக்கு ஆசையாய்
நேசித்து பூஜிக்கும் பக்தருக்கு
அடிமையாய் தொண்டு செய்யும்
எனது சங்கடம் அறிந்து இப்பொழுது இரங்குவீர் ஏந்தலே
புகலும் ஐயா இன்னமும் சகிப்பதற்கு
இடமில்லை என்பதுன் திருவுள்ளம்
அறியாததோ கனவு கண்டது போல்
இருக்கின்ற தாஸன் என் இஷ்ட
காம்யங்கள் தரவே காலம் கடத்தாமல்
இது சமயம் எந்தனை கண்
பார்த்து இரங்குமையா தினமும் உமதன்பர்க்கு உதவி செய்வதில்
கண்கண்ட தேவாதி தேவனென்றும்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

3

தயவினால் அன்பர் தம் துயர் தீர்த்து
வருகின்ற தர்ம சாஸ்த்ரைய்யன் என்று சந்ததமும் உன்னைத் தொழும்
கரந்தையர் பாளையத்தில்
அதி ஸுமுகன் பய நிவாரணம் செய்ய
மத வாரணத்து பரி பவனி வந்து
பவனியாளும் பக்த பரிபாலனே
முக்தி புரி சீலனே பாண்டியனுக்கு அனுகூலனே
நயமான உந்தன் திரு நயனாரவிந்த
திருக் கருணாம்ருதம் பொழிகுவாய்
நாவினால் உந்தன் ஸ்துதி பாடிடும்
எனக்குன் நாம ஸந்தானம் அருள்
ஜெய வீரமணிகண்டர் பத பக்தனாம் தொண்டன் எனை ஆளும் குண பூஷணா திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

4

உன் தாரகப் பெருமை கூறவென்றால்
கட்செவியரசனாலும் ஆகுமோ ஒப்புமை சொல்வதற்கு இப்புவிதனில்
உனையன்றி வேறில்லை கண்டீர்
பந்தாடும் மோஹினி பரந்தாமனும்
பரமனும் தந்த பரமமென்றும்
பாரினில் அவதாரனென்று
ஆரணர் தினம் தொழும் பக்தரங்கனென்றும் உன் சிந்தாமணிக்குள் வளர் செந்தாமரைக் கமல பொற்பாத தூளி தருவாய்
தேடு நிதி உன்னை நாடுமென்னை
ஆதரித்தடிமை கொண்டருள்வாய்
மந்தாரை முல்லை சம்பங்கி குடமல்லி
மலர் மணமேறு குணமேருவோம்
திக்கெல்லாம் புகழ் பரவும் பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

5

பொன்னம்பலத்தில் இலகும் உன்
பாத பத்மத்தில் பூஜாதி பக்தி செய்யும் போதாக்கள் என்றுனது ஜாதாக்கள்
தருவம்ச பூர்வீக பக்தராகும் என்
நெஞ்சத்துயரை உன் நெஞ்சம்
அறியாதிருக்குமோ என்ன விதமோ
ஏழைப் பங்காளர் எனும் கேள்வி உந்தன் விருது எந்தன் மட்டுக்கும் இல்லையோ
சோகத்தில் மூழ்கலாமோ சொந்தமாய் ஒரு
சந்தானமும் தந்து எந்தன் வேதனை தீருமையா
இன்னமும் மணிதாஸன் அடி வணங்குவேன்
சின்மயானந்தனெனும் திக்கெல்லாம் புகழ் பரவும்
பூரணை புஷ்கலை மருவும் திருவாரியக் கடவுளே

ஸ்ரீ சபரி பஞ்சகம்

1

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம்
ஸுர்ப்பகாஸுரன் தவமிருந்து
தன் கை வைத்த பேர் சிரசு துய்ய
நீராகவே கருதினான் ஒரு வரத்தை
வரம் கிடைத்தவுடன் பரமகுருவாம்
ஹரன் சிரசில் தன் கரம் வைத்திடச் சென்றெடுத்தான்
வள்ளல் ஐவரளியுள் ஒளிந்தாரென்று
மாலறிந்து ஓடி ஓடி ஓடி வந்து
சரஸ மோஹினியாகி அஸுரனை
வெண்ணீராக்கி சம்புவை அணைந்து
பெற்ற சந்ததிப் பொருளாக வந்த என்கண்மனியே எங்கள் சங்கடம் தீருமைய்யா
சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா சரணம்ஐயப்பா
என்று உருகும் அன்பர் தமக்கு நீர்
ஸகல ஸௌபாக்யங்களும் தந்துதவும்
தபயோக ஸித்தாந்த சபரிபீடாஸ்ரம ஸ்தான மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

2

பண்டு ஹாலாஸ்யபதி கொண்ட மீனாக்ஷி
நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன் பாலவரம்
வேண்டுமென்று ஈசனாம் சம்புவை ப்ரார்த்தித்து
அமோக வரமும் கொண்டு மனமகிழ பூபன்
அண்டையில் மாலரனும் கூடியொரு மனமிசைய
மூர்த்தியாகி குமர வேஷத்தினால் அவரை
மோஹம் செய்து கொஞ்சிட தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்ளர்களாம்
துஷ்டர்களை நிக்ரஹித்த தீரனே தீனபரிபாலனே
எந்தன் துயரமெல்லாம் அகற்றி அபீஷ்டம் உதவும்
சண்ட ப்ரசண்ட கோதண்ட உத்தண்ட
சாஸ்த்ராதி தேவன் என்ற தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

3

பச்சை நிறமெச்சும் ஒரு நற் புரவி
மீதினில் சவாரி வரும் தீரனென்றும்
பந்தளத்தரசர்க்கு அந்தி பகல்
தரிசனம் பாலிக்கும் ஈசனென்றும்
கச்சவடம் மெச்சமுறும் கொச்சி
தெக்கேத்தான கர்த்தனாம் கேமனென்றும்
கண்டிருக்கின்றதொரு தொண்டனுக்காக
கால்தனில் விலங்கு பூட்டி தூக்ஷணம்
செய்யாமல் யக்ஷியை இருத்தி உன்
சொல்லுறுதி கேட்க வைத்தீர்
தொண்டிமையாம் என் துயர் தீர்த்து
அனுக்ரஹம் உறுதியாய் செய்யும் ஐயா
ஸச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய
ஸம்மோஹனாங்கன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா
குதிரைக் கொடியுடையோனே சரணம் ஐயப்பா

4

மாயானுபூதியாலே யானும் உந்தன்
பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி
மீதினில் என் வம்சவழியான தெய்வம்
நீ ஆதரிக்கின்ற நிஜரூபன் என்றுன்னை
எனதுள்ளம் தெளிவு கொண்டு நின்
சரண தூளியை எந்தன் சிரமணிந்தேன்
உன் நிஜ பக்த ப்ருத்யனாம் என்
காயாம்புரித் தலைவனே யான் கவலை
கொண்டு கண்ட இடமெல்லாம் சுற்றி வந்தேன்
கண்காக்ஷி தந்து எனது பண்பாடறிந்து
உதவும் காருண்ய வாரி நிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும்
தர்ம சாஸ்த்ரைய்யன் என்ற
தபயோக ஸித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என் தெய்வமே சரணம் ஐயப்பா

5

மங்களானந்த சரணங்களை வணங்கி அருள்
வாக்கினால் பஞ்சரத்ன மாலை போல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர் தம்
திருவருளினால் எங்கும் நிறைந்த ஈசனே
நீ மனதிரங்கி இந்த ஏழைமீதுன் திருக்கருணை
ரசமழை பொழியும் மீன லோசனத்தை நாட்டி
இப்பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும்
உம் புகழ் பாடி யான் வாழவே
புத்ர மித்ர களத்ர பக்தி முக்தி ஞான
புருஷார்த்தமும் தந்து உதவுவீர்
பங்குனியில் ஈராறு நாளில் உதித்த
மணிதாஸ குலதாஸனென்ற
தபயோக ஸித்தாந்த ஸபரி பீடாஸ்ரம ஸ்தான
மெய்ஞ்ஞான குரவே குரவே குரவே ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஐயப்ப பஞ்சரத்ன மாலா

அகத்திய முனிவர் அருளிய ஐயப்ப பஞ்சரத்ன மாலா:


அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்
அசலனாய் அகுண குணணாய்

அமரருக்கு அதிபனாய் அடியவர்க்கு எளியனாய்
ஹரிஹரர் ஒரு மைந்தனாய்

சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
ஜோதியாய் தோன்றும் உந்தன் 

துரிய லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதும் அறியேன்

பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் 

பிதற்றுகின்றேன் நின் பெரும் கோயில் ஏய்தினேன்
பிழை பொறுத்தருள வருவாய் 

தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச 
சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அந்தகாரத்திலே அருள் விளக்கு ஏற்றுவாய்
அடவியிலே வழி காட்டுவாய்

அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள் 
கள்வர் அணுகாது காத்து வருவாய் 

வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்

மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய் 
மரணபயமும் போக்குவாய் 

இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ 

ஏறாத மலையேறி எய்தும் மெய்யடியவரை
ஏற்பது உன் பாரமல்லவோ

சந்தண சுகந்த சுந்தர சுதந்திர
சித்த சங்க சற்குருநாதனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே 

எண்ணுவோர் எண்ணியது எல்லாம் தந்து
பேரின்ப மழை பொழியும் முகிலே 

நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே

நெடும் பாலை வனவாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே 

மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே 

வர நீல சேல சிங்கார சுகுமார 
மதிவதனனே மணிகண்டனே 

சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணம் சரணம் அருள்வாய் 

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரி மாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

நீயலாதென் குறைகள் கேட்பவரும் இல்லை ஒரு 
நிழலில்லை என்று மனமோ 

நிலையில்லை நினை அடையும் நியமங்கள் இல்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை

ஆயிரம் பிழைகள் தனது அடியவர் புரிந்தாலும்
ஆதரித்து அருளும் அரசே 

அவதார மூர்த்தியே அன்பான தெய்வமே
ஆதி ஐய்யப்ப குருவே

தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஈன்றவர் உன்னை

தொட்டனைத் துய்ய நீ யார் போன்று உளாய் என
சொல்லாது மௌனாகி

தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க

அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க 

விரத நியமங்களால் மெய் மறந்து உனது பெயர்
விண்ணதிரவே முழங்கி 

வெற்பேறி வளர்படிகள் மேலேறி வருகின்ற
மெய்த் தொண்டர் வாழ்க 

தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க 

தேடும் இக்கவி மாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க 

சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணம் சரணம் ஐயா 

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே 

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

சிவபாலன் ஐயனுக்கும். மோகினி பாலனுக்கும், வில்லாலி வீரனுக்கும், வீரமணிகண்டருக்கும், அச்சன்கோவில் ஆண்டவர்க்கும், ஆரியங்காவு அய்யாவிற்கும், புலிபால் கொணர்ந்தவர்கும், புகழ் குளத்தூர் ஆண்டவர்கும், சண்டபிரசண்டருக்கும், வீரமணிகண்டருக்கும், பம்பையின் பாலனுக்கும், சபரிமலை சாஸ்தாவிற்கும் மங்களம், ஜெய மங்களம், மங்களம் நித்திய சுபமங்களம். ஜெய மங்களம், நித்திய சுபமங்களம்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

கன்னிமாரையும், ஐயன்மாரையும் கட்டிக்காத்தருளவேண்டும், என் குருநாதன் சபரிமலை வாழும் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா, சரணம் ஐயப்பா.

பொருள்

  • அந்தகாரம்: இருள், அஞ்ஞானம், மும்மலம்
  • சதமதன: 100 மதன்
  • அடவி: காடு
  • அரவு: பாம்பு 
  • அலகை: பேய் 
  • கனகாந்தகிரி:  கனக + அந்த + கிரி (தங்கம் போல ஜொலிக்கும் மலை) 
  • மருங்குற: பக்கம் உள்ள
  • துய்ய: தூய்மையான, சுத்தமான, மாசற்ற, நிர்மலமான

ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்துதி தசகம்

(இயற்றியவர் : ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்)

(ஸ்ரீ ஹரிஹரபுத்ரனின் பாதாதி கேச வர்ணனை செய்த ஸ்துதி தசகம்)

ஆஸானுரூப ஸரணாரவிந்த பாஜாம்
கருணார்ணவ பூர்ண ஸந்த்ரம்
நாஸாய ஸர்வ விபதாமபி நௌமி நித்யம்
ஈஸான கேசவ புவம் புவனைக நாதம் 1.

பிஞ்சாவலீ வலயிதா கலித ப்ரஸுன
ஸஞ்ஜாத காந்தி பராபாஸூர கேசபாரம்
ஸிஞ்ஜான மஞ்ஜூ மணிபூஷண ரஞ்ஜிதாங்கம்
ஸந்த்ராவதம்ஸ ஹரிநந்தனம் ஆஸ்ரயாமி 2.

ஆலோல நீல லலிதாலக ஹார ரம்யம்
ஆகம்ர நாஸ மருணாதர மாய தாக்ஷம்
ஆலம்பனம் த்ரிஜகதாம் ப்ரமதாதி நாதம்
ஆனம்ர லோக ஹரிநந்தனம் ஆஸ்ரயாமி 3.

கர்ணாவலம்பி மணிகுண்டல பாஸமான
கண்ட ஸ்தலம் ஸமுதி தானன புண்டரீகம்
அர்ணோ ஜனாப ஹரயோரிவ மூர்த்தி மந்தம்
புண்யாதி ரேகமிவ பூதபதிம் நமாமி 4.

உத்தண்ட சாரு புஜதண்ட யுகாக்ர ஸம்ஸ்த
கோதண்ட பாண மஹிதாந்த மதாந்த வீர்யம்
உத்யத் ப்ரபாபடல தீப்ரமத ப்ரஸாரம்
நித்யம் ப்ரபாபதிமஹம் ப்ரணதோ பவாமி 5.

மாலேய பங்கஜமலங்க்ருத பாஸமான
தோரந்தராள தராளமல ஹாரஜாலம்
நீலாதி நிர்மல துகூலதரம் முகுந்த
காலாந்தக ப்ரதிநிதிம் ப்ரணதோஸ்மி நித்யம் 6

யத்பாத பஞ்கஜயுகம் முனியோப்ரஜஸ்ர
பக்த்யா பஜந்தி பவரோஹ நிவாரணாய
புத்ரம் புராந்தக முராந்தக யோருதாரம்
நித்யம் நமாம்யஹம் அமிர்த குலாந்தகம் தம் 7.

காந்தம் கலாய குஸுமத்யதி லோபநீயம்
காந்தி ப்ரவாஹ விலஸத் கமநீயரூபம்
காந்தா தனூஜ ஸஹிதம் நிகிலாமயௌக
காந்தி ப்ரதம் ப்ரமதநாதமஹம் நமாமி 8.

பூதேஸ பூரி கருணாம்ருத பூரபூர்ண
வாராம் நிதே வரத பக்த ஜனைக பந்தோ:
பாயாத் பவான் ப்ரணதமேனமபார கோர
ஸம்ஸார பீதமிஹமா மகிலாமயேப்ய: 9.

ஹே பூதநாத பகவன் பவதீய ஸாரு
பாதாம்புஜே பவது பக்தி ரசஞ்சலாமே
நாதாய ஸர்வ ஜகதாம் பஜதாம் பவாப்தி
போதாய நித்ய மகிலாங்க புவே நமஸ்தே 10.

இதி ஸ்ரீ தர்மசாஸ்த்ரு ஸ்துதி தஸகம் ஸம்பூர்ணம்



சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...