1
கோடி ஸூர்யப்ரபா மண்டலம் போல்
ஒளி வீசி வருகின்றதைப் பார்
குவலயக் கண்ணன் த்ருபுவன வச்ஸ்யன்
நீல கோமளாங்க ப்ரகாசன்
தேடும் நவரத்ன கிரீட திவ்ய கேயூர ஹாரன்
செங்கையில் மாணிக்க பாத்ரம் கரும்பு வில்
அபயம் சேர்ந்திலங்கும் புஷ்ப பாணன்
நாடி நமதருகில் அவர் ஓடி விளையாடியே
நமதபீஷ்டங்கள் நாடு பதினேழறையில் தருவார்
நம்புவோர்க்கு உபகாரி என்பதில்
இவரன்றி நாட்டில் ஓர் தெய்வம் யார் காண்
ஆடலம்பரி ஏறி கூடலம்பதி சென்று
அடிமை கொண்டு அருளை நல்கும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்சோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே
2
மண்டலம் புகழ் வேதியர்கள் தொழும்
வீரமணிகண்டர்
இவர் பவனி பாரீர் வாசல் ப்ரதானியாய்
ஆவேசரங்கம் செய்து வருகின்றவன் கருப்பன்
தண்டலதிபன் தலைவன்
இண்டலையன் அண்டையில்
சட்டமிடு திட்டமுடையோன்
சாடி வரும் காற்றாடி
ஆடுறிஞ்சி முத்தன்
காடு வெட்டிகளும் கூட
துண்டரீக தலைவரென்ற செல்ல பிள்ளை
சுமதி முன்னோடி வருவார்
தோரணம் கட்டி
சமூஹகாரர்கள் தொழுதேற்ற தொண்டரிஷ்டங்கள் தருவார்
அண்டர் முனி தெண்டனிடுகின்ற
மணிகண்டர்
ஆராதனம் செய்யுமென்று
ஆதி சதுர் வேதங்கள்
ஒதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.
3
சிந்தையானந்தமுறவே ஒளி விளங்கும்
குல தெய்வம் வரும் கோஷமிது காண்
சீரணி வெறிக்கலியின் விலங்கொலி,
கலீர் கலீர் என சிறந்தழகு பூண்டு
அருகினில் வந்தவர்கள் வழி
பார்த்து இரங்கி வசமாகுவாள்
மாளிகையில் மேல் இசக்கி வடிவழகி
காடிக்கல் யக்ஷியுடன் வாது கொள் இசக்கி கூட
சொந்தமாம் பத்ரகாளியின் தனி
முழக்கொலி சேர் காளி வரதாளியும்
சொல் பெரிய பேச்சி வடிவில்
பிரம்மராக்ஷஸியும் சூழ்ந்து கொண்டாடி நடக்க
அந்தணர்கள் சிந்தையில் நினைத்த வரம்
அருளும் ஆவேச தேவனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.
4
விதி மனம் கொண்டு பாரதி முலைப்பால்
உண்ட வீரன் சவாரி பாரீர்
வில் அம்பு கத்தி கட்டாரியும் வல்லயம்
ஈட்டி வேல் பரசு வாள் சுரிகையும்
குதி கொண்டு பூதங்கள் எதிர்
கொண்டு அடுத்து வர
கூடலங்காடு சென்று
குட்டித் தாய்ப்புலி வட்டமிட்டு
அனந்த கோடி கூட்டி நகரோடு வந்து
மதுராபுரிக்கு அரசன் எதிராய் அழைத்து
தேவி தலைவலி மாற்றி நின்றஅரசே
வந்து என் துயராற்றி மைந்தர் வரமும் தந்து
என் வம்ச வழி காத்தருள்வாய்
அதி ரூப லாவண்யன்
மதி பூர்ண வல்லபன்
ஹரிஹர குமாரனென்றும்
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
5
பணிகின்றவர்க்கு உயிர்த் துணை
என்ற விருதுடன் பாலிக்கும் ஸுகுண சீலன் பக்த பரிபாலனென்று எத்திசையும்
புகழ்கின்ற பூர்ண சிந்தாமணிக்கு இணையான மாணிக்க மார்பனாம் எனது
இஷ்டகுல தெய்வமாகி வந்த இவர் இருக்கும் போது கவலை ஏனோ மனமிரங்கி எமக்கின்று கண்காட்சி தருவாய்
கனி கண்டு கொண்டு கண்மனி
என்றிவர் பாத கமலத்தை இடைவிடாமல் காத்திருந்தால்
நமக்கு ஏற்ற வரமும் தருவார் கைவல்ய மூர்த்தி என்ற
அணிவேலவர்க்கு இளைய மணிதாஸர் ஹ்ருதயத்தில்
அருள் தத்வ போதனென்று
ஆதி சதுர் வேதங்கள் ஓதும் பரஞ்ஜோதியே
எங்கள் அச்சனார் கோவில் அரசே.
எமையாளும் குலதெய்வமே சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment