திருச்சிற்றம்பலம் அ௫ளியவர் : சுந்தரர் திருமுறை : ஏழாம் திருமுறை பண் : நட்டராகம் நாடு : சோழநாடு காவிரி வடகரை தலம் : குருகாவூர் வெள்ளடை இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1 ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2 பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3 வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை அப்படி அழகாய அணிநடை மடஅன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4 வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5 பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் ...
Om Namo Bhagavate Vāsudevāya