மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள். தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...
Om Namo Bhagavate Vāsudevāya