Saturday, December 5, 2020

என்ன கவி பாடினாலும்

 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 

இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி) 


அனுபல்லவி

அன்னையும் அறியவில்லை 

தந்தையோ நினைப்பதில்லை 

மாமியோ பார்ப்பதில்லை

மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...) 


சரணம் 

அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை 

பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை 

இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை 

(அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)

Wednesday, November 7, 2018

விநாயகர்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

Monday, November 5, 2018

லிங்காஷ்டகம்

பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ரவராச்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுத வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்திய ரேசவ லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் களங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும்லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரும் முனிவரும் போற்றிடும்லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும்லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போக்கிடும்லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரின் உருவின் பூஜைக்கோள்லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்.

Wednesday, October 31, 2018

ஹரிவராசனம்


ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

Monday, October 22, 2018

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |

அநாயகைக நாயகம் விநாசி’தேப தைத்யகம்
நதாசு’பாசு’நாச’கம் நமாமி தம் விநாயகம் ||

நதேதராதி பீகரம் நவோதிதார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜ்ஜரம் நதாதிகாப துத்தரம் |

ஸுரேச்’வரம் நிதீஸ்வரம் கஜேச்’வரம் கணேச்’வரம்
மஹேச்’வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரந்தரம் ||

ஸமஸ்தலோக ச’ங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ர மக்ஷரம் |
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யச’ஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம் ||

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரிபூர்வ நந்தனம் ஸுராரிகர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச’ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம் ||

நிதாந்தகாந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம் |
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகினாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம் ||

மஹாகணேச பஞ்சரத்ன மாதரேணயோ(அ)ன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகீ ஹ்ருதி ஸ்மரன் கணேச்’வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாஹிதீம்
ஸுபுத்ரதாம் ஸமாஹிதாயுரஷ்ட பூதி மப்யுபைதி ஸோ(அ)சிராத் ||

கஜமுக கஜமுக கண நாதா சுரகண வந்தித குண நாதா
த்விரவதன விபுதவினுத விக்னராஜ பாஹிமாம்
விக்னகோடி ஹரண விமல கஜானன விக்னேச்’வரேச்’வர  பாலய சம்போ
லம்போதர கங்காதர புத்ர அம்பாமுக பங்கேருஹ மித்ர
ஹிமகிரி தனுஜாம் தனுஜம்த்வாம் நதமவ கருணா ஜலதேதாம்
லம்போதர லம்போதர லம்போதர ஹர ஹர ||

திருவருட்பா

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
      பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
      உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
      கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
      நமச்சி வாயத்தை நான்மற வேனே!
                              -இராமலிங்க அடிகளார்


(திருவருட்பா, இரண்டாம் திருமுறை 23. நமச்சிவாயப் பதிகம்)

http://www.thiruarutpa.org/thirumurai/v/T75/tm/n-amassivaaya_sangkiirththana_lakiri

Friday, September 7, 2018

துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்தவளே
தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நற் துர்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...