ஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி ய ஏவம் வேத (1) யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர் . யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1) யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (2) யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம் . எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2) யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (3) யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நி...
Om Namo Bhagavate Vāsudevāya