Thursday, May 25, 2023

திருவேளைக்காரன் வகுப்பு

திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு


ஆன பய பத்தி வழிபாடு பெறு முத்தி

அதுவாக நிகழ் பக்த ஜனவாரக்காரனும் 


ஆரம் அது உரித்த கனி காரணம் முதற்று அமைய

நாருடன் உணக்கைபரி தீமைக்காரனும் 


ஆகமம் விளைத்த கில லோகமு நொடிப் பளவில்

ஆசையொடு சுற்றுமதி வேகக்காரனும் 


ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய

அநுபூதியடை வித்ததொரு பார்வைக்காரனும் 


ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க

அமராவதி புரக்குமடல் ஆண்மைக்காரனும் 


ஆடகவி சித்ரகன கோபுர முகப்பில்

அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும் 


ஆயிர முகத்து நதி பாலனும் அத்தடிமை

யானவர் தொடுத்த கவி மாலைக்காரனும் 


ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசு

மாதிமுடி வற்ற திருநாமக்காரனும் 


யான் எனதெனச் சருவும் ஈன சமயத்தவரும்

யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் 


யாது நிலை யற்றலையும் ஏழு பிறவிக் கடலை

ஏறவிடு நற்கருணை யோடக்காரனும் 


ஏரகம் இடைக்கழிசி இராமலை திருப்பழநி

ஏரணி செருத்தணியில் வாசக்காரனும் 


ஏழையின் இரட்டை வினை யாயதொருடற் 

சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் 


யாமளை மணக்கும் அகசாமளை மணிக்குயிலை

யாயென அழைத்துருகு நேயக்காரனும் 


ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்

யாக முனிவர்க்குரிய காவற்காரனும் 


ஈரிரு மருப்புடைய சோனை மதவெற்பிவரும்

யானை அளவிற்றுவளும் ஆசைக்காரனும் 


ஏடவிழ் கடப்பமலர் கூதள முடிக்கும்

இளையோனும் அறிவிற் பெரிய மேன்மைக்காரனும் 


வானவர் பொருட்டு மகவானது பொருட்டுமலர்

வாவியில் உதித்தமுக மாயக்காரனும் 


வாரண பதிக்கு உதவு நாரணனு உவக்கு

மருமானும் அயனைக் கறுவு கோபக்காரனும் 


வாழியென நித்த மறவாது பரவிற் சரண

வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் 


மாடமதில் சுற்றிய திரிகூடகிரியிற் கதிர்செய்

மாநகரியிற் கடவுள் ஆயக்காரனும் 


வாளெயிற துற்ற பகுவாய் தொறு நெருப்புமிழும்

வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும் 


வாளகிரியைத் தனது தாளிலிடியப்பொருது

வாகை புனை குக்குடப தாகைக்காரனும் 


மாசிலு உயிருக்கு உயிர் மாசில் உணர்வுக்கு குணர்வும்

வானில் அணுவுக்கு அணுவு உபாயக்காரனும் 


வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்படம

காடவியில் நிற்பத ஓர் சகாயக்காரனும் 


மீனவனு மிக்க புலவோரு முறை பொற் பலகை

மீது அமர் தமிழ் திரவிய விநோதக்காரனும் 


வேரி மது மத்த மதி தாதகி கிடுக்கைபுனை

வேணியர் துதிப்பத ஒரு கேள்விக்காரனும் 


வேல துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ

வேலை உறவிட்ட தனி வேலைக்காரனும் 


மீனுலவு கிர்த்திகைக்கு மாரனு நினைக்கும் அவர்

வீடுபெற வைத்தருள் உதாரக்காரனும் 


மேனையரி வைக்குரிய பேரனும் மதித்த திறல்

வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும் 


வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்

விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும் 


வேடுவர் புனத்தில் உருமாறி முனி சொற்ப்படி

வியாகுல மனத்தின் ஒடு போம் விற்காரனும் 


மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு

மேதகு குறத்தி திரு வேளைக் காரனே. 

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...