Skip to main content

Posts

Showing posts from March, 2024

வானமளாவிய மாமரமே...

வானமளாவிய மாமரமே... என்னை வாவென்றழைக்கும் தபோவனமே குருநாதனின் நாமம் ஞானானந்தமே-அங்கே  நாடிச்சென்றால் பேரானந்தமே (வானம்) தேனூறும் தென் பெண்ணை ஆறோரமே - அங்கே  தேவனிருக்கும் தபோவனமே  திருக்கோயிலூர் குடிகொண்ட கோபாலனே - அங்கே  காவி உடைகொண்டு வந்துள்ளானே (வானம்) கண்ணனும் கந்தனும் கலந்து விட்டான் - அங்கே கருணை வடிவமாய் தோன்றிவிட்டான்  நம் மன்னன் ஞானானந்தன் ஆற்றல்களை - ஹரி தாஸனால் செப்பிட ஆகிடுமோ (வானம்) நாமாவளி: ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த  ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த  சீர்பெருகும் சச்சிதானந்தமாகிய சின்மயனே குருநாதா (ஞானா) பார்முழுதும் பரமாகி நிறைந்திடும் பாக்கியமே குருநாதா (ஞானா) பேரறிவாகிய ப்ரஹ்ம நிலை கடை பேசறியேன் குருநாதா (ஞானா) யார் தருவார் இந்த அனுக்கிரஹம் அனைத்தையும் ஆண்டவனே  குருநாதா (ஞானா) யார் தருவார் இந்த உலகினில் நலத்தையே ஆண்டவனே குருநாதா(ஞானா) அந்தகன் போலவே அலைந்து திரிந்த எனை ஆண்டவனே குருநாதா(ஞானா) பக்தி வைராக்கிய பல முறை நூல்கள் பரம் பொருளே குருநாதா (ஞானா) நித்ய நிரஞ்சன நிர்குணமாகிய  நிர்மலனே குருநாதா (ஞானா) ஞானானந்தா....