Skip to main content

Posts

Showing posts from January, 2024

பழநி திருப்புகழ்

அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய் அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதம் அதாய் வளர்ந்து பதினாறாய் சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து  துதியாமல் தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய் மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை மணிமுடியின் மீதணிந்த  மகதேவர் மனமகிழவே அணைந்து ஒருபுறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடிவேலா பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல்வீரா பரம பதமே செந்தில்  முருகன் எனவே உகந்து பழனிமலை மேல் அமர்ந்த  பெருமாளே