Skip to main content

Posts

Showing posts from February, 2023

மைத்ரீம் பஜத

காஞ்சி பரமாச்சாரியார் எழுதி எம்.எஸ் அவர்கள் ஐநா சபையில் பாடியது மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத யுத்தம் த்யஜத ஸ்பர்த்தாம் த்யஜத த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமணம் ஜனனீ ப்ருத்வீ காமதுகாஸ்தே ஜனகோ தேவ: சகல தயாளு தாம்யத தத்த தயத்வம் ஜனதா ச்ரேயோ பூயா சகல ஜனானாம் தமிழில் அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க! அன்னியர் தமையும் தன்னிகர் காண்க! போரினை விடுக! போட்டியை விடுக! பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க! அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்! அப்பன் ஈசனோ அகிலதயாபரன்! அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்! உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! பொருள்: பணிவு, அன்பு ஆகியவற்றைக் கொண்ட சேவையை உலக மக்கள் அனைவரும் செய்யுங்கள். அச்சேவையே அனைவர் இதயத்தையும் வெல்ல உதவும். தன்னைப் போலவே அனைவரையும் எண்ணிப் பாருங்கள். போரினைக் கைவிடுங்கள். அவசியமற்ற அதிகார போட்டியினையும் கை விட்டுவிடுங்கள். பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்கிரமிக்கும் அக்கிரமச் செயலைக் கை விட்டு விடுங்கள். பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறாள். மக்களின் தந்தையான இற...