copy from https://thapas.wordpress.com/2018/10/09/தோடகாஷ்டகம்-thotakashtakam-with-meaning/ ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்யர் சிருங்ககிரி மடாலயத்தில் எழுந்தருளி, யாவருக்கும் அனுகிரகஞ் செய்து கொண்டிருக்கும்போது, குரு பணிவிடைகளில் மிகப் பக்தியுடையவரான “ஆனந்தகிரி” என்னும் மாணாக்கர், இச்சங்கர பகவத்பாதாச்சாரியர் சந்நிதியை அடைந்து, உடம்பை நிழல்பற்றிச் செல்வதுபோல ஆசாரிய சுவாமிகளின் கருத்தை யுணர்ந்து ஏவாமலே சிறந்த தொண்டுகளை செய்து வந்தனர். ஒருநாள் மாணாக்கரெல்லாரையும் வைத்துக்கொண்டு வேதாந்த பாடம் ஆரம்பிக்கும் சமயத்தில், ஆனந்தகிரி என்னும் மாணாக்கர், ஆசிரியரின் காஷாய வஸ்திரத்தைச் சுத்தம்செய்து வர ஆற்றுக்குப் போயிருந்தார். அப்போது, மற்ற மாணாக்கர்கள், பாடத்தை ஆரம்பிக்கும்படி பிரார்த்தித்து நிற்கையில், “ஆனந்தகிரி” வரட்டும், என்று ஆசாரியரது கட்டளை யுண்டாயிற்று. அப்போது, பத்மபாதர் வணங்கி, சுவாமி! அவர் செய்யுந் திருப்பணி, செய்துகொண்டே இருக்கின்றனர்; அவர் வராமை எங்கள் பாடத்திற்குத் தடையாகலாமா? என்று வினாவினர். அதற்கு ஆசாரிய சுவாமிகள், பத்மபாதருக்கு அச்செருக்குத் தொலையும்பொருட்டுத், தமது அன்பராகிய ஆனந்தகி...
Om Namo Bhagavate Vāsudevāya