#அஷ்டகம்_என்றால் எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது. இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன். நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன். ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன். ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி...
Om Namo Bhagavate Vāsudevāya