மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி கானுறு மலரெனக் கதிர் ஒளிர் காட்டிக் காத்திட வந்தவளே தாணுறு தவஒளி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள் மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நற் துர்கையளே ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி தண தண தந்தன தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய் கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய் பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல்குமரியே சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கௌரி க...
Om Namo Bhagavate Vāsudevāya