Skip to main content

Posts

Showing posts from April, 2018

அருணகிரிநாதரின் திருப்புகழ்

முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும் முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ? தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட திக்கு பரி அட்ட பயிரவர் தொக்கு தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத கொத்து பறை கொட்ட களம் மிசை குக்கு குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே. 

திருவாசகம் - சிவபுராணம்

திரு மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது) நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க (5) வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளி...

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1 நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2 ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3 ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4 ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5 ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6 பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7 ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8 மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9 ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம் மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10 வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவ...