Hara Hara Sankara Jaya Jaya Sankara கவலை போக வழி! ஒரு முறை மகாபெரியவரிடம் ஒரு பெண்மணி, ‘நான் நிறைய ஸ்லோகம் சொல்றேன். ஆனா பிரச்னைகள் தீரலை. பகவான் கண்திறந்து பார்க்கலை’ என்று வருத்தப் பட்டார். ஸ்லோகம் சொல்லும்போது சுவாமி முன் உட்கார்ந்து, சுவாமியை மனசிலே நிறுத்திதானே பாராயணம் பண்றேள்?" கேட்டார் மகா பெரியவர். வேற வேலை பார்த்துக் கொண்டே தான் சொல்றேன். மனப்பாடம் பண்ணினது" என்றார் அவர். அதற்கு மகா பெரியவர் சொன்னார்: கா நறுக் கணும்னா அரிவாமணை, கத்தியை கிட்டே வெச்சுக் கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்டேபோகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினாதான் ஓடறது. ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்டே போக வேண்டாமா? ஸர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா, பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான்... கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே. நம் கவலைகள் கல் மாதிரி. பகவான் தெப்பம் மாதிரி. மனசு என...
Om Namo Bhagavate Vāsudevāya